எங்க ஊரு பக்கம் இதுக்கு பேரு 'அமுக்குப் பேய்'. அலோபதி மருத்துவத்துல இத Sleeping paralysis-ன்னு சொல்லுவாங்க. இந்த அனுபவம் எல்லோருக்கும் ஒரு தடவையாவது வந்திருக்கும்னு சொல்லுறாங்க. உங்களுக்கு இது வரைக்கும் இந்த அனுபவம் வந்தது இல்லைன்னா ஒன்னு நீங்க ரொம்ப சின்ன புள்ளைன்னு அர்த்தம். இல்லாட்டி போனா பேய் அமுக்குறது கூட தெரியாம நீங்க ஓவர் மப்புல தூங்குறீங்கன்னு அர்த்தம்.
இந்த பேய் ஏன் வருதுன்னு பார்க்கலாம். பொதுவா நீங்க தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது உங்க மூளை உடம்பு ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்திரிக்கனும். ஆனா சில சமயம் மூளை சுறுசுறுப்பா எழுந்த பிறகும் உடம்பு மட்டும் சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டே இருக்கும். மூளைய பொருத்த வரைக்கும் உங்களுக்கு முழிப்பு வந்தாச்சு ஆனா உங்க மத்த புலன்கள் எல்லாம் இன்னும் முழிக்காததால மூளை தர்ற சிக்னல் எதுவும் உங்க உடம்புக்கு எட்டாது. உங்க மூளை ஆணையிட்டாலும், மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது. என்னடா நான் கைய தூக்க சொல்லி ஆர்டர் போட்டும் இந்த கை சும்மாவே இருக்கேன்னு மூளையும் கொஞ்சம் குழம்பிப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல நீங்க சின்ன வயசுல படிச்ச திகில் கதை எல்லாம் உங்க மூளைக்கு ஞாபகம் வந்து...அமுக்குப் பேய்!
சரி இந்த மூளையும் உடம்பும் வேற வேற நேரத்துல எந்திரிக்க என்ன காரணம்? அது இன்னும் யாருக்கும் சரியா தெரியலை. ஒழுங்கில்லாத தூக்கம், மனச்சுமை, புது சூழ்நிலை இது மாதிரி வெண்டைக்காய விளக்கெண்ணைல முக்கி எடுத்த மாதிரி காரணம் சொல்லுறாங்க. நீங்க கைய கால அசைக்காம நல்ல ட்ரீம் அடிச்சிக்கிட்டு இருக்க சொல்ல, டமால்னு முழிப்பு வருதுன்னு வச்சிக்கோங்க, உங்க உணர்ச்சி எல்லாம் திரும்பிடும். ஆனா உங்க மூளையில ஒரு பார்ட் மட்டும் இது வெறும் கனவு தான், இதுக்கு போயி எதுக்கு கைய கால ஆட்டிக்கிட்டு கம்முன்னு கிடன்னு உடம்புக்கு ஆர்டர் போடுறதும் ஒரு காரணம்னு ஆராய்ஞ்சி பிரிச்சி மேஞ்சி கண்டுபிடிச்சி இருக்காங்க.
இந்த பிரச்சனை அடிக்கடி வந்தா, இனிமே மல்லாக்க படுக்காம குப்பற படுங்க. அமுக்கான் வர்றது குறையும்.இந்த பேய் ஏன் வருதுன்னு பார்க்கலாம். பொதுவா நீங்க தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது உங்க மூளை உடம்பு ரெண்டும் ஒரே நேரத்துல எழுந்திரிக்கனும். ஆனா சில சமயம் மூளை சுறுசுறுப்பா எழுந்த பிறகும் உடம்பு மட்டும் சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டே இருக்கும். மூளைய பொருத்த வரைக்கும் உங்களுக்கு முழிப்பு வந்தாச்சு ஆனா உங்க மத்த புலன்கள் எல்லாம் இன்னும் முழிக்காததால மூளை தர்ற சிக்னல் எதுவும் உங்க உடம்புக்கு எட்டாது. உங்க மூளை ஆணையிட்டாலும், மனசு ஆசைப்பட்டாலும் உங்களால கை, கால், மூக்கு, முடி எதையுமே அசைக்க முடியாது. என்னடா நான் கைய தூக்க சொல்லி ஆர்டர் போட்டும் இந்த கை சும்மாவே இருக்கேன்னு மூளையும் கொஞ்சம் குழம்பிப் போயிடும். அந்த மாதிரி நேரத்துல நீங்க சின்ன வயசுல படிச்ச திகில் கதை எல்லாம் உங்க மூளைக்கு ஞாபகம் வந்து...அமுக்குப் பேய்!
சரி இந்த மூளையும் உடம்பும் வேற வேற நேரத்துல எந்திரிக்க என்ன காரணம்? அது இன்னும் யாருக்கும் சரியா தெரியலை. ஒழுங்கில்லாத தூக்கம், மனச்சுமை, புது சூழ்நிலை இது மாதிரி வெண்டைக்காய விளக்கெண்ணைல முக்கி எடுத்த மாதிரி காரணம் சொல்லுறாங்க. நீங்க கைய கால அசைக்காம நல்ல ட்ரீம் அடிச்சிக்கிட்டு இருக்க சொல்ல, டமால்னு முழிப்பு வருதுன்னு வச்சிக்கோங்க, உங்க உணர்ச்சி எல்லாம் திரும்பிடும். ஆனா உங்க மூளையில ஒரு பார்ட் மட்டும் இது வெறும் கனவு தான், இதுக்கு போயி எதுக்கு கைய கால ஆட்டிக்கிட்டு கம்முன்னு கிடன்னு உடம்புக்கு ஆர்டர் போடுறதும் ஒரு காரணம்னு ஆராய்ஞ்சி பிரிச்சி மேஞ்சி கண்டுபிடிச்சி இருக்காங்க.
Source: http://manioosai.blogspot.com
No comments:
Post a Comment