ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் .
அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?
இதில் பார்க்க என்ன இருக்கு .. நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம்.
சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம்.
அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட்.
அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட்ட ஒரு சிந்தனை.
முதல் முதலில் நம் நாட்டிற்கு சிகரெட் வந்த போது அதன் விற்பனை சுத்த சைபர்.
'இது என்ன ஐட்டம் பா இது ஒரே நாற்றம் வீடெல்லாம் சாம்பல்.. இதை மனுஷன் அடிப்பானா' என்பது தான் இந்தியர்களின் சிகரெட் பற்றிய முதல் சிந்தனை.
அனால் அப்படி பட்டவர்களை சிகரெட் மோகத்திற்கு தள்ள அதன் கம்பெனி முதலாளிகள் பயன் படுத்திய வழிமுறை மிகவும் உளவியல் ரீதியானது. அது என்ன வழிமுறை தெரியுமா??
மிஸ்டர் A வை நீங்கள் பயமுறுத்த நினைக்கிறீர்கள் அவரை விட நீங்கள் உயர்ந்தவர் என காட்ட நினைக்கிறீர்கள் . ஆனால் அந்த மிஸ்டர் A என்கிற ஆசாமி உங்களை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை.. உங்களை பார்த்து பயபடுவதாவது அதுக்கு வாய்ப்பே இல்லை .
ஆனால் மிஸ்டர் A என்பவருக்கு மிஸ்டர் B என்றால் மிகுந்த பயம்.
அவரை கண்டால் மிரளுவார் என்று வைத்து கொள்ளுங்களேன் அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு முறை மிஸ்டர் B யை தூக்கி போட்டு அடித்து பந்தாடி விடுகிறீர்கள் இப்போது என்னாகும் .?
தான் இவ்ளோ பெரிய ஆளாக மதித்த B யையே இவர் போட்டு அடித்து விட்டார் எனில் இவர் சாதாரண ஆள் இல்லை என்கிற எண்ணம் மிஸ்டர் A மனதில் தானாகவே பதிந்து விடும்.
கிட்ட தட்ட இதே உளவியலை தான் சிகரெட் ஓனர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் அதை எப்படி செய்தார்கள் தெரியுமா?
நாம் பெரிதாக மதிக்கும் நாம் தலைவனாக ...உயிராக கொண்டாடும் சினிமா நடிகனை காசு கொடுத்து பிடித்து முதலில் சிகரெட் அடிக்க வைத்தார்கள். சிகரெட் என்பது சாதாரணமானவர்கள் அடிப்பது அல்ல அது பெரிய பெரிய ராயல் மனிதர்கள் பயன் படுத்தும் பொருள். சிகரெட் அடிப்பது ஆண்மையின் அடையாளம் என்று விளம்பர படுத்தினார்கள்.
நம்ம நடிகனே அடிக்கிறான் என்றால் அது எப்பேர் பட்ட பொருளாய் இருக்கும் என்ற மாயை வலையில் மக்கள் விழுந்தனர்.
விளைவு...
அழுக்கு சட்டை கிழிந்த லுங்கியுடன் இருந்தாலும் சிகரெட் வாங்கி அடிக்கும் அந்த நேரத்தில் தன்னை ராயலாக உணர தொடங்கினான் குடிமகன்.
இன்று வரை அவன் புத்தியில் அந்த சிந்தனை மாறவில்லை.
எவனோ ஒருவன் 'ப்ராடக்ட் ' ஐ விற்பதற்காக தனக்குள் இந்த சிந்தனையை செலுத்தி இருப்பதை அவன் கடைசி வரை உணறுவதில்லை.
கோக் பெப்சி குடிப்பதை டீசன்ட் இன் அடையாளமாக பார்ப்பது இளநீர் என்பதை' லோக்கல் ' என்ற முத்திரையுடன் பார்ப்பது என்கிற சிந்தனை இருக்கிறதே ... அதுவும் உங்கள் சிந்தனையே இல்லை..
ஒரு பாட்டில் நிறைய கோக் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 20 பைசா தான் என்கிறார்கள். மீதி இருப்பது பூரா அதன் விளம்பர செலவுதான் என்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் ஒரு 20 பைசா பொருள் அது எந்த தரத்தில் இருக்கும் என்று.
அப்படி இருக்க இவ்வளவு பொருளுக்கு நட்சத்திர அந்தஸ்து வந்தது எப்படி?
சில முக பசைகள் 7 வாரங்களில் சிகப்பாக்குவது உண்மை என்றால் 7 வாரங்களில் தமிழ் நாட்டில் ஒரு கருப்பனும் இருக்க கூடாதே...
பசை தடவி நிரந்தர வெள்ளை ஆனவன் என்று ஒருத்தன் கூட நாட்டில் இல்லையே அதெப்படி?
ஆமாம் அதிருக்கட்டும் முதலில் சிகப்பு நிறம் என்பது அழகு என்றும் கருப்பு நிறத்தை அசிங்கம் என்றும் நினைக்க படும் சிந்தனை இருக்கிறதே அது நம்மிடையே எப்போ எப்படி யாரால் வந்தது?
நமது பழங்கால வரலாற்றில் எங்கேயும் நிற வேறுபாடு குறித்து கருப்பை குறைந்து மதிப்பிடும் குறிப்பு என்று எதுமே இல்லையே..
கண்னகி தொடங்கி கிருஷ்ணன் வரை கருப்பு நிறத்தை கொடுத்து மகிழ்ந்த நாம் சிகப்பை அழகு என நம்ப தொடங்கியது அழகு பசை விற்கும் அந்த முதலாளிகள் வந்த பின் தான்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் நம் நாட்டில் இருந்து எக்க சக்க உலக அழகி தேர்ந்தெடுக்க பட்டார்களே இப்போது ஒருவர் கூட தேர்ந்தெடுக்க படுவது இல்லையே அது ஏன் தெரியுமா ?
அந்த போட்டிகளை நடத்துவதே face creem ஒனர்கள் தான் உலக அழகிகளை தங்கள் ப்ராடெக்ட்க்கு விளம்பர மாடலாக குத்தகை எடுத்து இந்தியாவில் தாங்கள் கால் ஊன்று வது தான் பின்னணி நோக்கம் .இங்கே போதிய அளவு பிசினஸ் பிடித்த விட்ட பின் தனது பொருள் விற்கப்படாத வேறு நாட்டில் சென்று அங்கு உலக அழகி களை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.
Lux என்பது நடிகைகளுக்கான சோப்பு என சொல்ல பட்ட போது அதை போட்டு குளிக்கும் பெண் தன்னை நடிகையாக பார்க்க தொடங்கினாள் சிகர்க்காயை கேவலமாக பார்க்க தொடங்கினாள்.
இந்த பெரும் முதலாளி எனும் முதலை வர்க்கம் நமக்குள் செலுத்திய எண்ணங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.
பிரிட்டிஷ் காரனிடம் நாம் விடுதலை வாங்கி விட்டதாக நம்பி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இன்னும் நாம் அவனுடைய சிந்தனைக்கு அடிமையாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டா?
நமக்கு கல்வி முறையை கொடுத்த ஜான் மெக்லே அவர்களது நாடாளு மன்றத்தில் பேசிய உரை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் " இந்தியர்களை எப்படி அடிமை படுத்துவது " என்ற கேள்விக்கு மெகளே பதில் அளிக்கையில் " இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டின் கலாச்சாரத்தில் ..பண்பாட்டில் பெருமை கொண்டவனாக இருக்கிறான் . அவனை தங்களது கலாச்சாரம் தாழ்ந்தது என்று எண்ணவைக்காமல்... அவனை ஆங்கிலம் என்பது உயர்ந்த மொழி அவன் பேசுவது தாழ்ந்த மொழி ..என்ற கருத்தை அவனுக்குள் வெரூன்றாமல் இந்தியனை அடிமை படுத்துவது இயலாத காரியம்" என்றான்.
விளைவு ...
ஆங்கிலம் பேசுபவனை அறிவாளி என நம்ப தொடங்கினோம்.
தமிழ் பேசுபவன் தாழ்ந்தவனாக ..முட்டாளாக .. பார்க்கப்பட்டான். இன்னமும் ஆங்கிலம் பேசுவதை 'டீசன்ட்' என்ற முதிரையோடு பார்க்கிறது சமூகம்..
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவனை இன்னுமும் பெண்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள்.
உண்மையில் ஆங்கில மொழியில் உயர்வாக எண்ணுவதற்கு ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் தவறு செய்தால் சாதாரணமாக யாரிடமும் சாரி என்று சொல்லி விட முடியும். ஆனால் "என்னை மன்னிசிடுங்க " என்று உங்களால் உடனடியாக சொல்லி விட முடியாது.
ஒரு கெட்ட வார்த்தையை 'பாஸ்டர்ட்' என நாம் நாலு பேர் முன்னாடி சொல்லி விட முடியும் ஆனால் அதே பொருள் கொண்ட தமிழ் வார்த்தையை அப்படி சொல்லி விட முடியாது..
காரணம் ஆங்கிலம் மிக மேலோட்டமானது தமிழ் மிக உயிரோட்டமானது.
'காக்கைகும் தன் குஞ்சு....'என்ற ரீதியில் எல்லாம் இல்லாமல் உங்களை ஒரு நடுநிலையாக வைத்து இந்த கையில் ஆங்கிலம் அந்த கையில் தமிழை வைத்து கொண்டு ... இரண்டையும் எடை போட்டு பார்க்க சொன்னால்...
இதில் உருவாகி உள்ள கலை இலக்கியம் அதில் உருவாகி உள்ள கலை இலக்கியம்..
இதில் உள்ள பெருமைகள் அதில் உள்ள பெருமைகள்....
இந்த மொழிகாக உயிரை விட்டவர்கள் அந்த மொழிக்காக உயிரை விட்டவர்கள்.
இந்த மொழி தோன்றி எத்தனை நாள் அந்த மொழி தோன்றி எத்தனை நாள் என்று எல்லாம் ஆய்ந்து பார்த்தால் ஆங்கிலம் தமிழுக்கு ஒப்புக்கு கூட நிகர் ஆகாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்படி இருக்க ஏன் அதை நாம் அவ்வளவு கொண்டாடுகிறோம்?
நாம் கொண்டாடவில்லை ... கொண்டாட வைக்க பட்டுள்ளோம்.
அடுத்ததாக,
இந்த வண்டியில் பூட்டும் மாடு இருக்கிறதே அதை முதல் முதலில் நுகத்தடியில் தலை வைத்து கட்டுவதற்கு பழக கஷ்ட பட வேண்டும்.
அதுவே தினம் வண்டி ஓட்டும் மாட்டை கவனித்தது உண்டா... அது தளை களை கிட்டே கொண்டு போனாலே தன் தலையை தானே குனிந்து அதில் மாட்டும்..
அப்படி நம்மை 'சிந்தனை அடிமை' ஆக்கி சின்னா பின்ன படுத்திய கும்பல் ஒரு பக்கம் என்றால் நாமாகவே சென்று தலையை கொடுத்து அடிமையாகி கொண்டிருப்பது மறுபக்கம்...
எப்படி என்று சொல்கிறேன்..
இந்த பூமி பந்திலேயே மிக சிறந்த கலாச்சாரத்திற்கும் மிக சிறந்த பண்பாட்டிற்கு சொந்தகாரனான நாம் வெளிநாட்டு கலாச்சாரத்தை பெருமை என நினைத்து மாறி வருகிறோம்.
ஒரு ஹோட்டலில் எல்லோருடைய வாய்க்குள்ளேயும் சென்று வரும் ஸ்பூனில் சாப்பிடுவதை ,வெறும் நம் வாய்க்குள் மட்டும் சென்று வரும் நம் கையை கொண்டு சாப்பிடுவதை விட சிறந்ததாக எண்ணுகிறோம்.
தன் தோல் கருக்க வெள்ளைக்காரன் மணிக்கணக்கில் சூரிய ஒளியில் கிடக்க நாம் நம் தோல் சிவக்க ஆயிரம் பசை பூசுகிறோம்..
ஒரு நல்ல நாள் என்றால் அதில் விளக்கை அணைப்பது நமது கலாச்சாரமல்ல அது அபசகுணம். நல்ல நாளில் விளக்கை ஏற்றுவது தான் நம் பழக்கம்.
ஆனால் பிறந்த நாளில் மெழுகை ஊதி
அணைத்து நம்மை 'வெள்ளைக்கார துறை 'யாக உணர்கிறோம்.
இந்த அன்னையர் தினம் என்ற ஒன்று வருகிறதே... அடடா அன்னையை நினைத்து அன்னை செய்த நற்செயலுக்கு நன்றி சொல்லி ஆஹா எவ்ளோ சிறந்த ஒரு நாள் அது..
ஒன்று சொல்லுகிறேன்..
அன்னையர் தினம் கொண்டாடுவதை போல கேவலம் வேறு எதுவும் இல்லை.
அம்மாவை நினைக்க ஒரு நாள் இருந்துட்டு போகட்டுமே அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.
தவறு மிக பெரிய தவறு.
தாயக்கு நன்றி சொல்லும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இல்லை நாம் அதை விட மிக உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள்.
ஒரு திருநாளில் புது துணி வாங்கி கொடுக்கும் அன்னையை பார்த்து யாரும் ரொம்ப நன்றி அம்மா என்று பாரதத்தில் சொல்லுவதில்லை .
ஆனால் இந்த தலைமுறை அதை செய்கிறது.
நமது கை இருக்கிறதே அது காலம் தோறும் நமக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது நமக்காக எவ்வளவு வேலை செய்கிறது .. எனவே நம் கை யை பார்த்து கை கு நன்றி சொல்ல சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.
" இதென்ன பைத்தியக்கார தனம் அது நம்முடைய கை தானே அதுக்கு நன்றி சொல்வது முட்டாள் தனம் அல்லவா" என்று நினைப்பீர்கள் அல்லவா... காரணம் நம் கையை நாம் நமது உடலில் இருந்து வேறாக பார்ப்பது இல்லை.
அப்படிதான் நம் தாயை நாம் நம்மிலிருந்து வேறாக பார்ப்பது இல்லை.
தான் வேறு அன்னை வேறு என்று நினைக்காத உன்னத கலாச்சாரத்தில் இருக்கும் இவன்.. வயது வந்த உடன் தாயை பிரிந்து விடும்... வருடத்திற்கு ஒரு முறை தாயை நினைவு கூறும் கீழான கலாச்சாரத்தை பார்த்து மயங்குகிறான் ...பாராட்டுகிறான் பின்பற்றுகிறான்.....
நேற்று.... நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கால போக்கில் காற்றில் விட்டு விட்டோம்...
இன்று அடுத்த அடி நமது பாரம்பரியத்தில் அடிக்க பார்க்கிறார்கள்
நம் தமிழ் மக்கள் சிசு வதை கூட செய்தது உண்டு ஆனால் பசு வதை செய்தது இல்லை.
இந்த விஷயத்தில் கார்ப்பரேட் கெட்டவர்கள் இந்த சிந்தனை திணிப்பில் இன்று வரை வெற்றி பெற வில்லை என்பது ஆறுதல் அளிக்கும் உண்மை என்றாலும்...
நாம் ஆயிரம் விஷயத்தில் இன்னும் சிந்தனை அடிமையாக இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை..
No comments:
Post a Comment